Tamizh Peraayam Club

குறிக்கோள் மற்றும் நோக்கங்கள்:

தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு மற்றும் கலாச்சார மதிப்பை மாணவர்களுக்கு உணர்த்தபட வேண்டும் அத்துடன் தமிழ்மொழிப்பற்றை உருவாக்கவும், மாணவர்களின் தனித்திறமையை வளர்க வேண்டும் என்பதே தமிழ்ப் பேராயத்தின் முக்கிய குறிக்கோள்.

வாழ்க தமிழ், வளர்க அதன் பெருமை.,

மன்ற ஒருங்கிணைப்பாளர்: முனைவர் ரா. விஜயராகவன், இணை பேராசிரியர், இயற்பியல் துறை.

மன்ற இணை ஒருங்கிணைப்பாளர்: திரு. நெ. அரவிந்தன், உதவி பேராசிரியர், கணிதவியல் துறை.

மின் அஞ்சல்: tamizhperaayam@aec.org.in

தமிழ்ப்பேராய மன்றம் நிகழ்ச்சிகள்:

1. நமது கல்லூரியில் 03-03-2018 அன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் அவர்களால் தமிழ்ப்பேராய மன்றம் தொடங்கப்பட்டு சுமார் 300 மாணவ உறுப்பினர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.

2. 25-06-2018 அன்று தமிழ்நாடு 50-ஆவது பொன்விழா ஆண்டிற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் நமது கல்லூரியின் தமிழ்ப்பேராய மாணவர்கள் அ.டேனியல் வில்சன், ப. இரா.அபிராகவி மற்றும் ம. ஸ்ரீ.உதயா ஆகியோர் பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப்போட்டி முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் வெற்றிப்பெற்றனர்.

3. 25.01.2019 அன்று நமது கல்லூரியின் தமிழ்ப்பேராய மன்றத்தின் சார்பாக தமிழ்க் கலை இலக்கியத் திருவிழா நிகழ்ச்சி பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டு
சிறந்த முறையில் தனது ஆற்றலை வெளிப்படுத்திய மாணர்வர்களுக்கு ராஜ் டிவி புகழ் கலைமாமணி திரு. நாகை. நாகராஜன் இளம் திறமையாளர் விருது வழங்கியதோடு, தமிழ்மொழியின் பெருமைகள் என்ற தலைப்பில்
மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.